உள்நாடு

கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடவுள்ள ரணில் விக்ரமசிங்க!

(UTV | கொழும்பு) –

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில் விக்ரமசிங்கவை முன்வைப்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அவசர தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க கட்சி சார்பற்ற அரசியல் ஜனாதிபதியாக செயற்பட வேண்டும். அனைத்துக் கட்சிகளின் கூட்டிணைவாக இதனை செய்து வருகிறார்.
பலர் போட்டியிட விரும்புகிறார்கள். ஆனால், இக்கட்டான காலங்களில் ஒரு நாட்டை சரியாக நடத்துவதற்கு இத்தகைய குணங்கள் கொண்டவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பஸ் கட்டணம் அதிகரிப்பு : புதிய குறைந்தபட்ச கட்டணம் ரூ. 32

முதலாவது அமர்வில் மூடப்படவுள்ள பொதுமக்கள் பார்வைகூடம்

மின்தடையினால் தொலைத்தொடர்பு கோபுரங்களது செயல்பாடிலும் பாதிப்பு