விளையாட்டு

U-19 ஆசிய கிண்ணத்தை வென்ற பங்களாதேஷ் அணி!

(UTV | கொழும்பு) –

துபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண சம்பியன் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்த்து விளையாடிய பங்களாதேஷ் 195 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியனானது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 50 ஒவர்களில் 8 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்கள் எடுத்தது. அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி 129, சவுத்ரி எம்டி ரிஸ்வான் 60, அரிபுல் இஸ்லாம் 50 ஓட்டங்கள் எடுத்தனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரரான அய்மான் அஹமட் 10 ஓவர்களில் 52 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். 24.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 87 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அவுஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்!

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

CSK அணியில் ஹர்பஜனும் கேள்விக்குறி