சூடான செய்திகள் 1

மில்கோ தலைவர் இராஜினாமா!

(UTV | கொழும்பு) –

மில்கோ நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ரேணுக பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நிதியமைச்சின் செயலாளருக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பி அவர் இதனை அறிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முதல், ரேணுக பெரேரா மில்கோ நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

அரசின் கொள்கை முடிவின்படி மில்கோ நிறுவனத்தை தனியார் மயமாக்கும் பணியை உள்ளூர் நிறுவனமும், இந்திய நிறுவனமும் இணைந்து தொடங்கியுள்ளனர் இந்த பின்னணியில், தனது சேவைக் காலம் இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், நிறுவனத்தை மேலும் முன்னேற்றுவதற்கு தனது நேரத்தை செலவிடுவது பயனளிக்காத காரணத்தினால் பதவி விலக தீர்மானித்துள்ளதாக ரேணுக பெரேரா, நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றைய வானிலை…

கொழும்பு கண் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவுக்கு பூட்டு

முன்னாள் அமைச்சர் எச்.ஆர். மித்ரபால காலமானார்