உள்நாடுசூடான செய்திகள் 1

மக்கள் நிர்க்கதி நிலையிலுள்ள வேளையில் காக்கைகளும் மைனாக்களும் மீண்டும் எழ முயல்கின்றன-  சஜித் பிரேமதாச

(UTV | கொழும்பு) –

 

15 இல் இருந்து 18 வீதமாக வெட் வரியை அதிகரித்து  நாட்டையே வங்குரோத்தாக்கிய ஜனாதிபதியின் எடுபிடிகள் மீண்டும் எழுச்சி பிற முயல்கின்றனர் என்றும் ,7 மூளைகளை கொண்டவர்கள் என நாட்டையே வங்குரோத்தாக்கிய காக்கைகளுக்கு மைனாக்களும் மீண்டும் எழுச்சி பெற கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றனர் என்றும், தேவைப்படும் சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிப் பொறுப்பை ஏற்காமல் தற்போது ஜனாதிபதி கனவில் இருப்பதாக கால்நடைகளின் மாநாட்டின் போது நாட்டையே வங்குரோத்தாக்கிய தலைவர் குறிப்பிட்டாலும்,நாட்டை வங்குரோத்தாக்கிய மொட்டுத் தரப்புடன் இணைந்து கொண்டு நாட்டை

கட்டியெழுப்ப முடியாது என்பதாலேயே இந்த பொறுப்பை ஏற்க தாம் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும்,தான் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் ஆணையுடனயே நாட்டைப் பொறுப்பேற்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி,ஏனைய கட்சிகளைப் போல் ஊடகங்களில் வந்து கோப்புகளை காட்டி பொய்ப் படம் காட்டாது என்றும், நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களை நடைமுறையில் சட்டத்தின் முன் எப்போதோ நிரூபித்து விட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வலியுறுத்தினார்.

நாட்டின் வங்குரோத்து நிலையால் வறுமை 30 இலட்சத்திலிருந்து 70 இலட்சமாக அதிகரித்திருக்கும் நேரத்தில், வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேர்தலின் போது மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், ஆட்சிக்கு வந்த பின் அரசியல்வாதிகளே தீர்மானங்களை எடுக்கின்றனர் என்றும்,இந்நிலையை மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும்,  கிராமத்திலும் நகரத்திலும் முடிவெடுக்கும் அதிகாரத்தை இளைஞர்களுக்கு வழங்குவதே ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இலக்கு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் முடிவெடுக்கும் உரிமை வழங்கப்படும் அதிகாரம் அளிக்கப்படும் என்றும், நாட்டில் சிறுவயது முதலே கல்வியை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம்,மூச்சுத் திட்டங்களை எதிர்க்கட்சி செயல்படுத்தியபோது அரசாங்கம் சேறுபூசும் செயற்பாடுகளை முன்னெடுத்தாலும்,ஐக்கிய மக்கள் சக்திக்கு பெறப்பட்ட ஒவ்வொரு நிதியும் வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வி முறையை மேம்படுத்தவே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

பியகம பிரதேசத்தில் நேற்றைய(17) தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பு மெனிங் சந்தை நாளை மறுதினம் முதல் திறக்க தீர்மானம்

தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சொத்துக்கள் பறிமுதல்

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்