(UTV | கொழும்பு) –
நாட்டில் உள்ள அனைத்து பதிவு செய்யப்படாத அகதிகளும் வெளியேற பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஆட்சி கடந்த 2021ஆம் ஆண்டு தலீபான்கள் கைவசமாதையடுத்து அங்குள்ள ஏராளமானோர் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தனர். இதனால், பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிய அகதிகளின் எண்ணிக்கை சுமார் 17 இலட்சமாக உயர்ந்தது.
இந்நிலையில் சமீப காலமாக பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு தலீபான்களுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகள் காரணமாகக்கூடும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே நாட்டில் உள்ள அனைத்து பதிவு செய்யப்படாத அகதிகளும் வெளியேற பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் இருந்து ஏராளமான அகதிகள் வெளியேறியிருப்பினும் மேற்கத்திய நாடுகளில் குடியேறுவதற்காக காத்திருக்கும் அகதிகளுக்கு இம்மாதம் 31ஆம் திகதிவரை அவகாசமளிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதற்கான ஏற்பாடுகள் முற்று பெறாததனால் இந்த காலக்கெடுவை நீடிக்க கோரி ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி தாமஸ் வெஸ்ட் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஜலீல் அப்பாசை சந்தித்து வலியுறுத்தியதன் பேரில் மேலைநாடுகள் செல்ல காத்திருக்கும் அகதிகளுக்கான காலக்கெடு அடுத்த ஆண்டு (2024) பெப்ரவரி 29 வரை நீட்டித்து பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්