உள்நாடுசூடான செய்திகள் 1

அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை- ஆஷு மாரசிங்க

(UTV | கொழும்பு) –

அதிகரிக்கப்பட்டிருக்கும் வரி வருமானங்களை முறையாக சேர்க்கும் பொறுப்பு அரச அதிகாரிகளுக்கே இருக்கிறது. அதனை செய்ய  தவறும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

அத்துடன் நாட்டின் மொத்த வருமானம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை எட்டக்கூடியதாக இருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்த்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவிததார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டை கட்டியெழுப்ப பயணிக்க வேண்டிய வழியை ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். அதன் பிரகாரம் செயற்பட்டு வருவதாலே தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் உதவியும் எமக்கு கிடைக்க இருக்கிறது.

எதிர்வரும் ஜனவரியில் அந்த உதவி கிடைக்கும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டிருந்தார். அதன் பிரகாரம் எமக்கு மொத்தமாக 670 அமெரிக்க டொலர்கள் கிடைக்கின்றன.

நாணய நிதியத்தின் இந்த கடன் உதவி கிடைப்பதன் மூலம் சர்வதேசத்துக்கு இலங்கை தொடர்பில் நம்பிக்கை ஏற்படுகிறது.

இதன் காரணமாக உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவிகளையும் எமக்கு பெற்றுக்கொள்ள முடியுமாகிறது.

அதேநேரம் ஜனாதிபதியின் நிதிக்கொள்கை மற்றும் வெளிநாட்டுக் கொள்கையை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது. நாடு என்ற வகையில் இது எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.

அத்துடன் வங்குராேத்து அடைந்திருக்கும் நாட்டை மீள கட்டியெழுப்ப அரச வருமானம் அதிகரிக்கப்படவேண்டும். அதனாலே தற்போது வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

அதனால் அரச வருமானங்களை சேகரிக்கும் அதிகாரிகள் அதனை முறையாக செய்ய வேண்டும். கடந்த காலங்களில் இந்த அதிகாரிகள் தங்களின் பொறுப்பை முறையாக செய்ய தவறியதாலே அரச வருமானம் குறைவடைந்திருந்தது.

அதனால் இந்த அதிகாரிகளின் மோசடிகளை நிறுத்த இவர்களின் செயற்பாடுகளை கண்காணிக்கவும் முறையாக செயற்படாத அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்கவும் தற்போது சட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் நாட்டில் இந்த வருடத்தின் நேற்றைய தினம் வரை வரு வருமானமாக 2540 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது.

வரி அல்லாத வருமானமாக 254 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றிருக்கிறது. அதன் பிரகாரம் நாட்டின் மொத்த வருமானமாக 2794 பில்லியன் கிடைக்கப்பெற்றிருக்கிறது.

எமக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கி இருக்கும் இலக்கு 2850 பில்லியனாகும். அதனால் நாணய நிதியத்தின் இலக்கை அடைவதற்கு முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

அதனை செய்வதற்கு அரச வருமானம் சேகரிக்கும் அதிகாரிகளில் இருக்கும் ஊழல் மோசடிமிக்க அதிகாரிகளை கண்டு பிடிக்க வேண்டும். எதிர்வரும் ஜனவரி முதல் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் கூட்டணியினரின் கோரிக்கை

மஹேல ஜயவர்தனவிடம் இன்று விசாரணை நடத்தப்படாது

சிறைக்கைதிகள் சித்திரவதை தொடர்பான கணொளி இன்று(16) வெளியீடு