உள்நாடு

சட்ட விரோத காணியை அபகரிப்பு – ஜீவன் தொண்டமானினால் தடுத்து நிறுத்தம்.

(UTV | கொழும்பு) –

ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரிக்காக ஒதுக்கப்பட்ட காணியை அபகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் தலையீட்டையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அக்காணியில் கட்டப்பட்டிருந்த தற்காலிக கட்டடமும் அகற்றப்பட்டுள்ளது. இனிமேல் காணியை ஆக்கிரமிக்க முற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹட்டன் பிளான்டேசனின் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மேற்படி காணியை பாடசாலைக்கு வழங்குவதற்கு ஏற்கனவே கொள்கை ரீதியில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த கல்லூரியின் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மறைந்த அமைச்சர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காணி விடுவிப்புக்கான ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டு விடுவிப்புக்கான நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறாக இந்த காணியை இப் பிரதேசத்தை சேர்ந்த சிலரின் உதவியுடன் போலி பத்திரங்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

எனினும், அப்பகுதியில் கட்டடம் எதுவும் நிர்மாணிக்கப்படாமல் அது கிடப்பில் இருந்ததால் அதனை ஆக்கிரமிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் தற்காலிக கடையொன்று அமைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவர்படப்டது.
இதனையடுத்து அங்கு அமைக்கப்பட்ட கடை அகற்றப்பட்டது, பாடசாலைக்கு உரித்தான அந்த காணியை பாடசாலைக்கு சட்டப்பூர்வமாக பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையை அமைச்சர் முன்னெடுத்து வருகின்றார்.

   

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

நாடு தழுவிய ரீதியில் GMOA தொழிற்சங்க நடவடிக்கையில்

தனஞ்சய டி சில்வா தனது 12வது டெஸ்ட் சதத்தை சற்று முன்னர் பதிவு செய்தார்!