(UTV | கொழும்பு) –
இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலக நாடுகளின் வலுவான ஆதரவோடு காசாவில் மனிதாபிமான போர்நிறுத்த தீர்மானம் ஐ.நா.பொதுச் சபையில் நிறைவேறியுள்ளது.
193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 153 வாக்குகள் அளிக்கப்பட்டன.
அமெரிக்கா, இஸ்ரேல், ஒஸ்திரியா, குவாத்தமாலா, லைபீரியா, மைக்ரோனேஷியா, நவ்ரு, பப்புவா நியூ கினியா, பராகுவே ஆகிய 10 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இதேநேரம் குறித்த வடக்கெடுப்பில் 23 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதோடு போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் வெற்றிபெற்றதை அடுத்து தூதுவர்கள் கைதட்டி ஆரவாரமும் செய்திருந்தனர்.
இந்நிலையில் அனைத்து தரப்பினரும் சர்வதேச மனிதாபிமானச் சட்டதின் கீழ் தமது கடமைகளுக்கு இணங்க வேண்டுமெனும் பொதுச்சபையின் கோரிக்கைக்கையை இந்த தீர்மானம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්