உள்நாடு

வர்த்தக வலய ஊழியர்கள் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

(UTV | கொழும்பு) –

அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிகரித்து செல்லும் வாழ்க்கை செலவுக்கு எதிராகவும் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பை தனியார் துறையினருக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று மாலை 5.30 மணி அளவில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வர்த்தக வலய தொழிலாளர்களுக்கான தேசிய மையம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் பதாதைகளையும் சுலோக அட்டைகளையும் ஏந்தி இருந்ததோடு எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.

தொழிலாளர்களுக்கான தேசிய மையத்தின் அழைப்பாளர் காமினி ரத்ன நாயக்க, தாபிது பெண்கள் அமைப்பின் இணைப்பாளர் சமிளி துஷாரி ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முகக்கவசம் அணியாத மேலும் 46 பேருக்கு தொற்று

இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை பூட்டு

மன்னம்பிட்டி விபத்து : சாரதிக்கு விளக்கமறியல் – 11 பேர் மரணம்