உள்நாடு

கொழும்பு துறைமுகத்திதற்கு வந்த முக்கிய மூன்று பயணிகள் கப்பல்!

(UTV | கொழும்பு) –

வாஸ்கோடகாமா, மெய்ன் ஷிஃப் 5, மற்றும் MS செவன் சீஸ் நேவிகேட்டர் ஆகிய மூன்று பயணக் கப்பல்கள் ஒரே நாளில் கிட்டத்தட்ட 4,000 பயணிகளுடன் கொழும்பிற்கு வந்துள்ளது.

சர் ரிச்சர்ட் பிரான்சனின் புகழ்பெற்ற குழுவின் ஒரு பகுதியான விர்ஜின் வோயேஜஸ் நிறுவனத்தில் இருந்து ‘ரெசிலியன்ட் லேடி’ கடந்த மாதம் இந்த கப்பல் சீசனை தொடங்கியது. ஆரம்பத்தில் வந்த மாரெல்லா டிஸ்கவரி 2இன் வருகை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. கொழும்பு துறைமுனத்திற்கு வருகை தந்திருக்கும் குறித்த கப்பல் பயணிகளை இறக்குவதற்காக கொழும்புக்கு மூன்று விமானங்களை கொண்டு வந்தது.

வாஸ்கோடகாமா கப்பலானது முதல்முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளது. அதன் பயணிகள் திருகோணமலை துறைமுகத்திற்கு தங்கள் பயணத்தைத் தொடரவுள்ளதாகவும் அதற்கு முன் கொழும்பின் துடிப்பான இடங்களுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், மின்னேரியா, தம்புள்ளை, சீகிரியா, பொலன்னறுவை, கிழக்குக் கடற்கரையின் மயக்கும் காட்சிகள் போன்றவற்றை சுற்றலா பயணிகள் ஆராய்வார்கள்.

ஒரே நேரத்தில் மூன்று பயணக் கப்பல்களை ஏற்பாடு செய்யும் தடையற்ற செயற்பாடு, பெரிய குழுக்களின் பல்வேறு விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் Aitken Spence Travels இன் விதிவிலக்கான திறனுக்கு ஒரு சான்றாகும். இவர்கள் இலங்கையில் உதிர்வரும் 17ஆம் திகதி வரை தங்கியிருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

editor

நாட்டில் இன்றும் மின்வெட்டுக்கு சாத்தியம்

வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும்