உள்நாடு

தபால் ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பு!

(UTV | கொழும்பு) –

கிண்ணியா ,தம்பலகாமம் தபால் நிலையம் இன்று காலை முதல் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக மூடப்பட்டிருந்தன.
இதனால் தபால் நிலையத்துக்கு வந்த பலர் தமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது திரும்பிச் சென்றனர். மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம் முதலானவற்றுக்கு பணம், செலுத்துவதற்காகவும் ஏனைய தேவைகளுக்காக வந்தவர்கள் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக தமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது திரும்பிச் சென்றனர்.

நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய அஞ்சல் அலுவலகங்களை அரசாங்கம் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்னும் பல கோரிக்களை முன்வைத்தும் அஞ்சல் திணைக்கள ஊழியர்கள் இவ்வாறு நள்ளிரவு 12.00 மணி முதல் 48 மணித்தியாலய பணிபகிஷ்கரிப்பில் நாடு முழுவதிலும் ஈடுபடவுள்ளனர்.அந்த வகையில் அஞ்சல் அலுவலக ஊழியர்களும் இந்த பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தம்பலகாமம் ,கல்மெடியாவ,சிராஜ் நகர்,முள்ளிப்பொத்தானை,கிண்ணியா பிரதான தபாலகம் உள்ளிட்ட பல உப தபாலகங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இதுவரையில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சிறந்த சூழல் இல்லை

கேரள கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் ஒருவர் கைது