உள்நாடுசூடான செய்திகள் 1

UPDATE: தற்போது சில பகுதிகளில் மின்சார விநியோகம் – நாடு முழுவதும் மின் தடை!

(UTV | கொழும்பு) –

UPDATE: 

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத்தடை காரணமாக சில பகுதிகளில் நீர் வழங்கலில் தடை ஏற்படலாம் என நீர் வழங்கல் சபை அறிவித்துள்ளது. எனவே நீரை சிக்கனமாக பாவிக்குமாறு நீர்ப்பாவனையாளர்களை அச்சபை கேட்டுள்ளது.

UPDATE: 

கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று (09) நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டது. இன்று மாலை 5.00 மணியளவில் மின்சார விநியோகம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை சீரமைக்க சுமார் 02 மணித்தியாலங்கள் செல்லும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

UPDATE :

தற்போது சில பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஏனைய பகுதிகளில் விரைவில் மின்சார விநியோகத்தை சீரமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

நாடு முழுவதும் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட இயந்திர செயலிழப்பு காரணமாக இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. என மின்சார சபை அறிவித்துள்ளது இதேவேளை, இது தொடர்பில் சற்றுமுன் பாராளுமன்றில் எழுப்பட்ட கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

WhatsApp இல் இணைய : https://chat.whatsapp.com/LQ7J1VGs9ckLSoaE0VxivU 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அஸ்ட்ராஜெனெகா எதிரொலி : இலங்கையிலும் மூவர் பலி

பதிவு செய்யப்படாத சிறிய நிதி நிறுவனங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு!

டயனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்படுமா??