உள்நாடு

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண போட்டியில் இலங்கை அணி வெற்றி!

(UTV | கொழும்பு) –

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

ஜப்பான் அணிக்கு எதிராக நடைபெற்ற இன்றைய போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்பான் அணியால் 30.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 75 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

ஜப்பான் அணி சார்பில் Charles Hinze 36 ஓட்டங்களை பெற்றார். இலங்கை அணி சார்பில் Malsha Tharupathi 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். போட்டியில் 76 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 12.2 பந்துகளில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முழு நாட்டினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுங்கள்.

பொலிஸ் பரிசோதகர்கள் 209 பேருக்கு பதவி உயர்வு

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமனம்