உள்நாடு

இ.போ.ச சாரதிகள், நடத்துனர்கள் பணிபகிஷ்கரிப்பில்!

(UTV | கொழும்பு) –

தங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடரும் என்று அக்கரைப்பற்று சாலையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எஸ்.ஹாறூன் அறிவிப்பு.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சபை ஆகிய இரண்டும், ஒருங்கிணைந்த சேவைகளை நேர அட்டவணையின் பிரகாரம் முன்னெடுத்து வருகின்றனர். இச்சேவையில் ஈடுபடுகின்ற தனியார் போக்குவரத்து பஸ் சாரதிகளும், நடத்துனர்களும் நேர அட்டவணையின் பிரகாரம் ஒருபோதும் நடப்பதில்லை. இத்த தவறுகளை உரியவர்களுக்கு சுட்டிக்காட்டியும் அத்தவறுகளை தொடர்ந்தும் செய்து வருவதாக அக்கரைப்பற்று சாலையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எஸ்.ஹாறூன் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த வீதியின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இன்று காலை முதல்  பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இப் போராட்டம் தொடர்பாக ஏ.எஸ்.ஹாறூன் மேலும் தெரிவிக்கையில், இன்று காலை 7.30 மணிக்கு அம்பாறையிலிருந்து அக்கரைப்பற்று பஸ் தரிப்பிடத்திற்கு வந்தடைய வேண்டிய தனியார் பஸ் ஒன்று, நேரம் தவறி வந்த விடயத்தை இலங்கை போக்குவரத்து அக்கரைப்பற்று சாலையின் போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் இருந்த உத்தியோகத்தரினால் சுட்டிக்காட்டப்பட்டபோது குறித்த பஸ் சாரதியும், நடத்துநரும் அந்த உத்தியோகத்தரை தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதலில் காயமுற்ற அவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவத்தை எதிர்த்தும், உரிய சாரதியும் நடத்துநரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் எங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை இப்பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும், இது தொடர்பில் எங்களின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளோமென தெரிவித்தார். இப்பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினால் அம்பாறை, கல்முனை, பொத்துவில், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பிரதேசங்களுக்கு செல்கின்ற பயணிகள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்புக்கு 16 மணித்தியால நீர்வெட்டு

ஆறு பேருக்கு மரண தண்டனை

உக்ரைன் சுற்றுலா பயணிகள் இலங்கையை வந்தடைந்தனர்