உலகம்

இஸ்ரேலிய படையினரிடம் இருந்து வெளியானது அதிர்ச்சி புகைப்படம்!

(UTV | கொழும்பு) –

இஸ்ரேலிய படையினர் காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து தடுத்துவைத்திருப்பதை காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலிய படையினர் பெருமளவு ஆண்களை கைதுசெய்து முழங்காலில் அமர்த்தியிருப்பதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வாகனமொன்றில் ஏற்றப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர். இந்த சம்பவம் எப்போது இடம்பெற்றது என்ற விபரங்கள் வெளியாகவில்லை,எனினும் அந்த படத்தில் உள்ள சிலரை குடும்பத்தவர்கள் நண்பர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

அந்த படத்தில் காணப்படுபவர்களில் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் எந்த அமைப்புடனும் தொடர்பில்லாதவர்கள் என உறவினர்கள் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பா மத்திய தரைமனித உரிமை கண்காணிப்பாளர் கைதுசெய்யப்பட்ட ஒருவரின் படத்தை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதுடன் இஸ்ரேலிய இராணுவத்தினர் பலரை கைதுசெய்து துஸ்பிரயோகம் செய்தனர் என பதிவிட்டுள்ளார். இட்பெயர்ந்த மக்களிற்கு எதிராக இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமான கைதுகளில் ஈடுபட்டுள்ளனர் மருத்துவர்கள் கல்விமான்கள் பத்திரிiயாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த கேள்விகளுக்கு இஸ்ரேலிய இராணுவம் பதிலளிக்கவில்லை என சிஎன்என் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இஸ்ரேல் வசமான ஹமாஸின் இராணுவ மையம்!

ஒபெக் சர்ச்சை : சவுதி இளவரசரை சந்தித்துப் பேசும் திட்டம் இல்லை

50 வருடங்களுக்கு பிறகு சஹாரா பாலைவனத்தில் வெள்ளம்

editor