(UTV | கொழும்பு) –
ஒக்டோபர் 13ம் திகதி இஸ்ரேல் மேற்கொண்ட டாங்கி தாக்குதல் காரணமாகவே ரொய்ட்டரின் ஊடகவியலாளர் இசாம் அப்டல்லா லெபானில் கொல்லப்பட்டார் என்பது விசாரணைகளின் மூலம் உறுதியாகியுள்ளது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளார்.எல்லைகளில் இடம்பெறும் எறிகணை தாக்குதல்களை படமாக்குவதில் செய்தியாளர்கள் ஈடுபட்டிருந்தவேளை இஸ்ரேலில் இருந்து இரண்டு எறிகணைகள் அடுத்தடுத்து மிகவேகமாக விழுந்து வெடித்ததில் ஊடகவியலாளர் அப்டல்லா கொல்லப்பட்டார் ஆறுபேர் காயமடைந்தனர்.
இஸ்ரேலிய எல்லையிலிருந்து ஒருகிலோமீற்றர் தொலைவில் உள்ள லெபனானின் அல்மா அல் சாப் கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இந்த சம்பவம் குறித்து முழுமையான தகவல்களை பெறுவதற்காக அரச பாதுகாப்பு அதிகாரிகள் இராணுவநிபுணர்கள் தடயவியல் நிபுணர்கள் உட்பட பலரை தொடர்புகொண்டு ரொய்ட்டர் அவர்களின் கருத்தினை பெற்றுள்ளது. அந்த பகுதியில் காணப்பட்ட எட்டு ஊடகநிறுவனங்களின் வீடியோக்களையும் படங்களையும் ரொய்ட்டர் ஆராய்ந்துள்ளது. செய்மதி புகைப்படங்களையும் ரொய்ட்டர் ஆராய்ந்துள்ளது.
விசாரணையின் ஒருபகுதியாக சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து குண்டு சிதறல்கள் உட்பட பல பொருட்களை ரொய்ட்டர் நிறுவனம் ஆராய்ந்துள்ளது. வெடிபொருட்கள் ஆயுதங்களை ஆராயும் நெதர்லாந்தின் சுயாதீனநிறுவனம் ஹேக்கில் உள்ள தனது ஆய்வுகூடத்தில் இவற்றை ஆராய்ந்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் செய்தியாளர்கள் நின்றுகொண்டிருந்த பகுதியிலிருந்து 1.34 கிலோமீற்றர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த 120எம்எம் டாங்கியிலிருந்து ஏவப்பட்ட எறிகணையின் பகுதி என அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. இஸ்ரேலின் டாங்கிகளே இந்த தாக்குலை மேற்கொண்ட என்பதற்கான ஆதாரங்கள் அடங்கிய அறிக்கையை ரொய்ட்டர் இஸ்ரேலிய இராணுவத்திடம்கையளித்துள்ளதுடன் மேலதிக விபரங்களை கோரியுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්