(UTV | கொழும்பு) –
மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மலையகத் தமிழர்களை இலங்கைச் சமூகத்தில் முழுமையாக இணைத்துக்கொள்வது குறித்து அறிக்கையிடுவதற்கான பொறுப்பும் வழங்கப்படுவதாக அவருக்கான நியமனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பின்வரும் விடயங்கள் தொடர்பான ஒருங்கிணைப்பு விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பெருந்தோட்டக் கம்பனிகளின் நலன் சார்ந்த விடயங்கள், மகளிர் மேம்பாடு,
சிறுவர் பாதுகாப்பு, தமிழ்ப் பாடசாலைகளுக்கும் பிற பாடசாலைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து அறிக்கையிடல் என்பன இந்த நியமனத்தின் ஊடாக வடிவேல் சுரேசுக்கான பொறுப்புகளாகக் குறிப்பிட்டுள்ளன.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්