(UTV | கொழும்பு) –
டுபாயில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP28 க்கு இணையாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இச் சந்திப்பின் போது ஜனாதிபதி விக்ரமசிங்க, வெப்ப வலய நாடுகளான இலங்கை மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளையும் பாதிக்ககூடிய விடயங்களுக்குத் தீர்வு காண ஒன்றுபடுமாறும் கேட்டுக்கொண்டார். அத்தோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வாவை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්