உள்நாடு

தலவாக்கலையில் நியமனங்கள் வழங்கிவைப்பு!

(UTV | கொழும்பு) –

ஹேலீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உதவி வெளிக்கள உத்தியோகத்தர் (Assistant Field Officer) பதவிக்கான நியமன கடிதங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன. ஹேலீஸ் பெருந்தோட்ட டி டநிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொஷான் ராஜதுரை தலைமையில், 25 யுவதிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நானுஓயா ரதல்ல விளையாட்டு மைதான கேட்போர் கூடத்தில் கடந்தவாரம் 27 விதிக்கத்தி நடைபெற்றது.

பெண்களின் முன்னேற்றம் தொடர்பில் எப்பொழுதும் அக்கறை செலுத்தக் கூடிய நிறுவனமான தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியானது புதியதோர் வேலைத்திட்டமாக பெண்களைகள உத்தியோகத்தர்களாக நியமிக்கக்கூடிய வேலைத்திட்டமொன்றினை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்க திட்டமிட்டது. இத்திட்டத்தினை முன்னெடுப்பதில ஹேலீஸ்; நிறுவனத்தின் முகாமைத்துவப் ரொஷான் ராஜதுரை மற்றும் தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO ) சேனக அலவத்தேகம அவர்களுடைய முற்போக்கான சிந்தனையின் அடிப்படையில் பெண்களை உத்தியோகத்தர்களாக நியமிப்பதற்கான 4 மாதகால பயிற்சிநெறி ஒன்றினை வழங்குவதற்காக அடிப்படைக் கல்வித்தகைமைகளை உள்ளடக்கிய பிரசுரங்கள் (Boucher ) தயாரிக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டன.

இவை பத்திரிகை மற்றும் சமூகவலைத்தளங்களின் ஊடாக பகிரப்பட்டன 25, பயிலுனர்களை இணைத்துக்கொள்வதற்காக பகிரப்பட்ட பிரசுரங்கள் ஊடாக இலங்கையின் எல்லாப் பிரதேசங்களிலும் வசிக்கக்கூடிய விண்ணப்பதாரர்களிடமிருந்து ஏறத்தாழ 450 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. பட்டதாரிகள் மற்றும் இளங்கலை பட்டதாரிகளும் குறிப்பிட்ட பாட நெறிக்காக விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விண்ணப்பித்திருந்த 450 விண்ணப்பதாரர்களில் ஆகச்சிறந்த 25 விண்ணப்பதரர்கள பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

இதன்போது பெருந்தோட்டங்களில் தொழில் புரியக்கூடிய பெற்றோரின் பிள்ளைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட 25 பயிலுனர்களுக்கான ஆரம்ப நிகழ்வு கடந்த ஜூன் மாதம் 16 ஆம் திகதியன்று முகாமைத்துவப் பணிப்பாளர் ரொஷான் ராஜதுரை , தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சேனக அலவத்தேகம , பெருந்தோட்ட பணிப்பாளர் நிஷாந்த அபேசிங்கே ஆகிNயுhர் தலைமையில் இலங்கைதேயிலை ஆராய்ச்சி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வின்போது, பெயார்வெல் – 7 , சமர்செட் – 9 கிருவானகங்க-9 (தெனியாய) பேர் என 25 பயிலுனர்களுக்கும் குழுக்களாக பயிற்சியளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.

தேயிலைப் பெருந்தோட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்ற முகாமையாளர்கள், உதவிமுகாமையாளர்கள், சிறப்புதேர்ச்சிபெற்ற கள உத்தியோகத்தர்கள் ஊடாக களப்பயிற்சிகள் வழங்கப்பட்டன. அத்துடன் பயிலுனர்களின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளை கண்டறிந்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்றகாக தலைமைக் காரியாலயத்தின் ஊடாக பெண் மனிதவள பொறுப்பதிகாரியொருவரை நியமித்ததுடன் குறிப்பிட்ட 3 தோட்ட நிர்வாகத்திற்குற்பட்ட மனிதவள முகாமைத்துவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவிடம் முழு ஒத்துழைப்பினையும் பெற ஆவணஞ் செய்யப்பட்டது.

பயிலுனர்களுக்கு உள்வாரி மற்றும் வெளிவாரியான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தினூடாக களப்பயிற்சிகள் வழங்கப்பட்டன. அத்துடன் தேசிய தொழிற் கற்கைகள் நிறுவனத்தின் ஊடாகவும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஜுலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சிகள் இடம்பெற்ற பின்னரே இவர்களுக்கு உத்தியோகப்பூர்வமாக நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன. இதற்கு முன்னரும் குறித்த நிறுவனத்தின் ஊடாக நியமனம் வழங்கியிருந்த போதிலும் இவ்வாறு முதன்முறையாக ஒருமித்து 24 பெண்களை உதவி வெளிக்கள உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.நியமனக்கடிதம் வெழகும் நிகழ்வில் ஹேலீஸ் நிறுவகத்தின் அதிகாரிகள் நியமனக் கடிதம் பெற்றுக்கொண்டவர்களின் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

   

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

10 நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு !

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – விசேட விசாரணைகள் முன்னெடுப்பு

இலங்கையினுள் அவசர பாவனைக்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக் V