உள்நாடு

பயங்கரவாத தடைச்சட்டத்தை மறுசீரமைத்து அடிப்படைச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துங்கள் – சர்வதேச நாடுகள்

(UTV | கொழும்பு) –

பயங்கரவாத தடைச் சட்டத்தை சர்வதேச தரத்திற்கு அமைவாக மறுசீரமைத்து பொதுமக்களின் அடிப்படைச் சுதந்திரத்தினை உறுதிப்படுத்துங்கள் என்று அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் மிகத் தீவிரமான கரிசனையை வெளியிட்டுள்ளன.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் மற்றும் கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஸ் ஆகியோர் தமது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம், நடைபெற்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளின் பின்னர் 12பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையை அடுத்தே அவர்கள் மேற்கண்டவாறான கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் வெளிப்படுத்தியுள்ள பதிவுகள் வருமாறு,

அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கின் பதிவில், “அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் கைதுசெய்யப்படுவது சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் நடத்தப்படும் விதம் உட்பட பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்து தகவல்கள் கிடைப்பது கரிசனையை ஏற்படுத்துகின்றது.கருத்து சுதந்திரத்தையும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மனிதாபிமான ரீதியில் நடத்தப்படுவதையும் உறுதிப்படுத்துவது அவசியமாகும். குறிப்பாக அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை அகற்றி விட்டு புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தருணத்தில் அது அடிப்படை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்” என்றுள்ளது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக்கின் பதிவில், “பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் குறித்து கரிசனை கொண்டுள்ளேன் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்துவதாகவும் மனித உரிமைகளை மதிக்கும் புதிய சட்டத்தினை கொண்டுவருவதாகவும் இலங்கை அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிகளில் உறுதியாகயிருக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்” என்றுள்ளது. கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஸின் பதிவில், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் இலங்கைச் சிறைகளில் கைதிகளை நடத்துவது மிகவும் கவலைக்குரியது. சிறுபான்மையினர் உட்பட மனித உரிமைகளை இலங்கை தனது கடமைகளுக்கு இணங்க பாதுகாக்க வேண்டுமென கனடா வலியுறுத்துகிறது” என்றுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தங்கம் மற்றும் டொலரின் இன்றைய நிலவரம் இன்றைய நிலவரம்

அவசர தேவைகளை தீர்ப்பதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

ஹிருணிகாவுக்கு எதிராக முஸம்மிலின் மகன்: திகதி வழங்கிய நீதிமன்றம்