உலகம்

அமெரிக்க விமானப் பயன்பாட்டை நிறுத்திய ஜப்பான்!

(UTV | கொழும்பு) –

அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான ‘ஆஸ்ப்ரே’ ரக விமானமொன்று 8 பேருடன் ஜப்பான் நாட்டுக்கு அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதைத் தொடா்ந்து, அந்த வகை விமானங்கள் இயக்கப்படுவதை நிறுத்திவைக்க அந்நாடு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சக உயரதிகாரி டாரோ யமாடோ கூறுகையில், ‘ஆஸ்ப்ரே’ விமான விபத்து தொடா்பாக நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தி வருவதாகவும், அதுவரை தங்களது படைகளில் உள்ள அந்த வகை விமானங்கள் இயக்கப்படுவதை நிறுத்திவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினாா். விபத்துப் பகுதியில் தேடுதல் பணிகளில் மட்டும் அவை ஈடுபடுத்தப்படவுள்ளன.ஜப்பானிலுள்ள அமெரிக்க விமான படைதளத்திலிருந்து 8 பேருடன் பயிற்சிக்காக புறப்பட்ட ‘ஆஸ்ப்ரே’ ரக விமானமொன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்திலிருந்த ஒருவா் உயிரிழந்ததுடன் எஞ்சியவா்கள் மாயமாகியுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இத்தாலி உயிர்த்த ஞாயிறு தினம் வரை முடக்கப்படும்

தென்கிழக்காசிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகள்

கொவிட் 19க்கு மத்தியில் தென்கொரியாவில் தேர்தல்