உலகம்

போர் நிறுத்தம் இன்றுடன் முடிவா – இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) –

ஹமாஸ் போராளிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. கட்டார், எகித்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் போர் நிறுத்த முயற்சியை மேற்கொண்டன.

இதன் பயனாக இலங்கை நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அதற்குப் பதிலாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது. ஒரு பணயக்கைதிக்கு மூன்று பலஸ்தீனர்கள் என்ற அடிப்படையில் பரிமாற்றம் நடைபெற்றது. முதலில் நான்கு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பின் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டது. நேற்று 6-வது நாளாக ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளை விடுவித்தனர். அதற்குப் பதிலாக இஸ்ரேலும் பலஸ்தீனர்களை விடுவித்தது. இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணியுடன் 6 நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனால் இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை தொடருமா? போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து தெளிவு இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் “இராணுவ நடவடிக்கை செயற்பாடுகள் நிறுத்தப்பட்டது அப்படியே தொடரும். வரையறைக்கு உட்பட்டு மத்தியஸ்தரர்கள் பணயக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டு தொடருவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் ஒரு பணயக்கைதியை விடுவிக்கும்போது, இஸ்ரேல் 3 பலஸ்தீனர்களை சிறையில் இருந்து விடுவிக்கும். மேலும், காசாவிற்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் போராளிகள் எதிர்பாராத வகையில் கொடூர தாக்குதல் நடத்தினர். இதனால் காசா மீது போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டில் 1200 பேரும், இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 3,917,653 பேர் பாதிப்பு

இந்தியாவினால் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியும்: இமானுவல் மேக்ரான் நம்பிக்கை

editor

ஈரான் மீதான தாக்குதலால்: உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்வு