உள்நாடு

2,367 பிள்ளைகள் பிரபல பாடசாலைகளில் சட்டவிரோதமாக அனுமதி – ஜோஸப் ஸ்டாலின்

(UTV | கொழும்பு) –

கணக்காய்வாளர் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த 3 வருடங்களில் 2,367 பிள்ளைகள் பிரபல பாடசாலைகளில் சட்டத்துக்கு அப்பாற்பட்ட முறையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜோஸப் ஸ்டாலின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2020 ஜனவரி 1 முதல் 2022 மே 31 வரையிலான காலப்பகுதியில் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட அறிக்கையில் மூலம் சட்ட வரையறைக்கு அப்பாற்பட்ட வகையில் பிள்ளைகளை அனுமதிப்பதற்காக 3,308 கடிதங்களை கல்விச் செயலாளர் வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது என்றார்.

அவற்றில் 72 சதவீத கடிதங்கள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமையவே வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சாறுவா சுனிலுக்கு 15 வருட கால கடூழிய சிறைத் தண்டனை

திகாமடுல்ல தேர்தல் மாவட்ட முடிவுகளை மீள எண்ணுமாறு தேசிய காங்கிரஸ் தேர்தல் ஆணைக்குழுக்கு மகஜர்

editor

தற்காலிக சாரதி உரிமங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு