உள்நாடுசூடான செய்திகள் 1

அரச ஊழியர்களின் , ஓய்வூதியம் ஜனவரியிலிருந்து வழங்க தீர்மானம்!

(UTV | கொழும்பு) –

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரையிலான வரி வருமான அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற அரச வருமான பிரிவு கூட்டத்தின் போது சமர்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் பிரகாரம் ஜனவரி மாதம் தொடக்கம் நவம்பர் மாதத்தில் 21 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 2446 பில்லியன் ரூபா வரி வருமானத்தை தேசிய வருவாய் திணைக்களம் பெற்றுக்கொண்டுள்ளது.

எனவே வரவு – செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கான வாழ்க்கை செலவு கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான 2500 ரூபா அதிகரிப்பு ஆகியவற்றை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்தே வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கான வாழ்க்கை செலவு கொடுப்பனவாக பத்தாயிரம் ரூபாவை வழங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்தது.

இந்த தொகையில் ஐயாயிரம் ரூபாவை ஏப்ரல் மாதத்திலும் எஞ்சிய ஐயாயிரம் ரூபாவை ஒக்டோபர் மாதத்திலும் வழங்குவதற்கே அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

அதே போன்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான 2500 ரூபா அதிகரிப்பையும் ஏப்ரல் மாத்திலிருந்து வழங்குவதற்கே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த அதிகரிப்பு தொகைளை ஜனவரி மாத்திலிருந்தே வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வியாழக்கிழமை இடம்பெற்ற அரச வருமான பிரிவு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன் பிரகாரம் ஜனவரி மாதத்திலிருந்து ஐயாயிரம் ரூபாவையும் ஏப்ரல் மாதத்திலிருந்து பத்தாயிரம் ரூபாவை அரச ஊழியர்களுக்கும் வழங்கவும்,  2500 ரூபா அதிகரிப்பை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜனவரி மாத்திலிருந்து பெற்றுக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரையிலான வரி வருமான அறிக்கை இந்த கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையின் பிரகாரம் ஜனவரி மாதம் தொடக்கம் நவம்பர் மாதத்தில் 21 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1457 பில்லியன் ரூபா வருமானத்தை தேசிய வருமான திணைக்களம் பெற்றுக்கொண்டுள்ளது.

மேலும் சுங்க வருமானமாக 842 பில்லியன் ரூபாவும், மதுவரி தினைக்கள வருமானமாக 70 பில்லியன் ரூபாவும் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், ஏனைய துறைகள் உள்ளடங்களாக மொத்த வரி வருமானமாக 2446 பில்லியன் ரூபா அரச வருவாய் தினைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கான முழுமையான அறிக்கையை ஜனாதிபதி ரணிலிடம் அதிகாரிகள் சமர்பித்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பதில் காவற்துறை மா அதிபராக சீ.டீ.விக்ரமரத்ன நியமனம்

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற குழுவானது பிரதமர் தலைமையில் கூடுகிறது

மிச்செல் பெச்சலட் இன்று வாய்மூலமான விடயங்களை முன்வைக்கவுள்ளார்