உலகம்

மர்ம நபரின் கத்தி குத்தால் அயர்லாந்தில் கலவரம்!

(UTV | கொழும்பு) –

அயர்லாந்தின் தலைநகரமான டப்ளினில் குழந்தைகள் மீது மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கி வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் தலைநகரமான டப்ளினில் சமீபத்தில் மர்ம நபர் ஒருவர் பாடசாலைக்குள் புகுந்து கண்மூடித்தனமாக அங்கிருந்த குழந்தைகளை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஒரு சிறுமி, இரு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 5 வயது சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குழந்தைகள் மீது நடத்தப்பட்ட கொடூர வன்முறையால் கொதித்தெழுந்த மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் எழுந்த நிலையில் போராட்டம் கலவரமாகி அருகில் இருந்த கடைகள் சூறையாடப்பட்டதோடு வாகனங்களுக்கு பலர் தீ வைத்தனர். இதனால் இந்த கலவரம் நாடு முழுவதும் பரவும் அபாயம் எழுந்துள்ளதால் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அயர்லாந்து பாராளுமன்றத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அயர்லாந்து பொலிஸார் குழந்தைகளை தாக்கிய சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இராணுவ தொலைக்காட்சி வலையமைப்பு அலைவரிசைகளை நீக்கியது யூடியூப்

அமெரிக்காவில் ஒரே நாளில் மட்டும் 1321 பேர் உயிரிழப்பு

நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்த சுற்றுலாப் பயணி.