(UTV | கொழும்பு) –
காஸாவில் உள்ள மருத்துவமனைகளை ஹமாஸ் படையினர் பயன்படுத்தி வருவதாக தொடர்ச்சியாக இஸ்ரேல் குற்றச்சாட்டுகளை கூறிவரும் நிலையில், காஸாவின் அல்-ஷிபா மருத்துவமனையின் அடிப்பரப்பில் சுரங்கம், பதுங்கு குழிகளில் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டு மையத்தை அமைத்திருந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையின் அடிப்பகுதியில் ஹமாஸ் நிறுவியிருந்த சுரங்கம் குறித்த காணொளியை இஸ்ரேல் நேற்று(22) வெளியிட்டுள்ளது. இக்காணொளி, வெளிநாட்டு செய்தியாளர்கள் வசமும் வழங்கப்பட்டள்ளது.காணொளியில் கற்களைக் கொண்டு 150 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள சுரங்கத்தின் முடிவில் குடியிருப்புகள் உள்ளகைதக்காண முடிகிறது. மேலும், அவற்றில் குளிர்சாதன வசதி, சமையலறை, குளியலறை, இரும்புக்கட்டில் ஆகியவை உள்ளன.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්