உள்நாடு

தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகள் வெளியான முடிவுகள்!

(UTV | கொழும்பு) –

இவ்வருட ஆரம்பித்திலிருந்து இதுவரையான காலப் பகுதி வரை மொத்தம் 115 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளன, இது ஒரு வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான மருந்துகளின் தரத் தோல்விகளைப் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தர சோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில், சுமார் 58 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை, 45 மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை, மற்றவை சீனா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து வந்தவை. தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட மருந்துகளில், சில திரும்பப் பெறப்பட்டதுடன் சில மருந்துகளின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பணம் பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் : நடவடிக்கை என்கிறது SJB

இதுவரை 3,142 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது இம்முறை சாத்தியப்படாது