(UTV | கொழும்பு) –
ஐ.சி.சி. பொதுச் சபைக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா வெறும் பார்வையாளராக கலந்துகொண்டிருந்ததுடன் ஸ்ரீல்ஙகா கிரிக்கெட் மீதான அரசியல் தலையீட்டை சீர் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் அவகாசம் வழங்குமாறு ஐ.சி.சி.யிடம் கோரிக்கை விடுத்தார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான இடைக்காலத் தடை தொடர்வதால் இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தென் ஆபிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இம் மாதம் 24ஆம் திகதி நடைபெறவிருந்த ஐசிசி வருடாந்த மாநாடும் வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளது. மேலும் இலங்கை மீதான இடைக்காலத் தடை அமுலில் இருக்கும்வரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிதி தொடர்பான விடயங்கள் ஐசிசி மற்றம் ஐசிசி பொதுச் சபையின் கட்டுப்பாட்டில் இருக்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.
இந்தியாவின் அஹமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி பொதுச் சபைக் கூட்டத்தின்போது இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்படதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.சி.சி. பொதுச் சபைக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா வெறும் பார்வையாளராக கலந்துகொண்டிருந்தார். ஸ்ரீல்ஙகா கிரிக்கெட் மீதான அரசியல் தலையீட்டை சீர் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் அவகாசம் வழங்குமாறு ஐசிசியிடம் ஷம்மி சில்வா கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அரசியல் தலையீடுகள் காரணமாக உலக றக்பி அமைப்பு மற்றம் பீபா என்பன இலங்கை மீது விதிக்கப்பட்ட இடைக்கால தடடைகளை கருத்தில்கொண்டு பதிலளித்த ஐசிசி, அரசியல் தலையீடு தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசுக்கு போதிய அவகாசம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதற்கு அமைய விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால நிருவாக சபை நீக்கப்படும்வரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான இடைக்காலத் தடை தொடரும் எனவும் இதன் விளைவாக கொழும்பில் அடுத்த வருடம் (2024) ஜனவரி, பெப்வரி மாதங்களில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியை நடத்தும் பொறுப்பு தென் ஆபிரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை பங்குபற்றுவதற்கு அனுமதிக்குமாக ஐசிசி அங்கத்துவ நாடுகளிடம் ஷம்மி சில்வா விடுத்த உருக்கமான வேண்டுகோளை அடுத்து ஐசிசியின் இடைக்காலத் தடைக்கு மத்தியிலும் இருதரப்பு மற்றும் ஐசிசி போட்டிகளில் பங்குபற்றுவதற்கு இலங்கைக்கு விதிவிலக்களித்து ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්