உள்நாடு

“திருக்கோவிலில் கணவனும், மனைவியும் தற்கொலை”

(UTV | கொழும்பு) –   திருக்கோவில் பிரதேசத்தில் கணவனும் மனைவியும்   தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (21) செவ்வாய்கிழமை அவர்களது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துளள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் 3 பகுதியைச் சேர்ந்த 28 வயதான மனோகரன் தேவதர்சன் மற்றும் மற்றும் 23 வயதுடைய ரவிந்திரகுமார் நிலுயா இருவருமே இவ்வாறு உயிரிழந்தனர்.

குறித்த இருவருக்கும் 3 வருடத்திற்கு முன் திருமணமாகியதுடன் இரண்டு வயதுடைய பெண் குழந்தை ஒன்று இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த இருவரின் சடலங்களும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சித்தாலேப்ப தைல குழுமத்தின் தலைவர் விக்டர் ஹெட்டிகொட காலமானார்

பேரூந்து சங்கங்கள் சிவப்பு எச்சரிக்கை

‘இலங்கைக்கு பல நாடுகள் ஆதரவு’