(UTV | கொழும்பு) –
கிரிக்கெட் நிறுவனத்தினால் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வழங்கப்பட்ட பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதற்கான எழுத்து மூல ஆதாரம் தன்னிடம் உள்ளதாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, அந்த பணத்தில் ஒரு பகுதி காலணிகள் இல்லாத, மட்டை இல்லாத, பந்து இல்லாத, விளையாட மைதானம் இல்லாத குழந்தைகளுக்காக செலவிடப்பட்டதாக குறிப்பிட்டார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு குறித்த பணம் பயன்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, 280 மில்லியன் காசோலை ஒன்று கையொப்பம் பெற்றதன் பின்னர் கையளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், கிரிக்கெட் வீரர்கள் கஷ்டப்பட்டு ஈட்டிய பணம் தேவையற்ற விடயங்களுக்கு செலவிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්