உள்நாடு

நிந்தவூரில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடை பவனி!

(UTV | கொழும்பு) –

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நிந்தவூர் ஆதார வைத்தியசாலையும், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் ஒழுங்கு செய்திருந்த விழிப்புணர்வு நடைபவனி இன்று நடைபெற்றது.

இந்நடைபவனியில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள், நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி, நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர், வைத்தியசாலை அதிகாரிகள், வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இரத்தத்தில் சாதாரண அளவைவிட அதிகமாக குளுக்கோஸ் காணப்பட்டால் அது நீரிழிவு எனப்படும். தற்போது நீரிழிவு நோயின் தாக்கம் இலங்கையிலும், உலகளாவிய ரீதியிலும் அதிகரித்து வருகிறது. இந்நோயை முன்கூட்டியே இனங்கண்டு சிறந்த முறையில் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதை மூலம் ஆரோக்கியமாக வாழலாம் என்பதைத் தெரிவித்து நோயின் அறிகுறி, அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடைமுறைகள், நீரிழிவு நோயாளிகளுக்கான சிபாரிசுசெய்யப்பட்ட உணவு வகைகள் எவை என்பது தொடர்பில் பிரசுரமொன்றும் இந்த நடைபவனியில் விநியோகிக்கப்பட்டது.

   

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மரத்துடன் மோதிய தனியார் பஸ் – 15 பேர் காயம்.

புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் – சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு 260 சிறைக்கைதிகளை விடுதலை