உள்நாடு

ஹட்டன் – டிக்ஓயா ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம்.

(UTV | கொழும்பு) –

ஹட்டனில் இருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச்செல்லும் டிக்ஓயா ஆற்றில் விழுந்து காணாமல்போயிருந்த ஒரு பிள்ளையின் தந்தையொருவரின் சடலம் குறித்த ஆற்றில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் – டிக்கோயா, ஒஸ்போன் தோட்டத்தின் மேல் பிரிவைச் சேர்ந்த சந்திரசேகரன் சுரேன் என்ற 28 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் நகருக்கு வந்துள்ள குறித்த நபர், மது அருந்திவிட்டு, பஸ்ஸில் சென்றுள்ளார். பஸ்ஸில் இருந்து இறங்கி, வீடு நோக்கி நடந்து செல்கையிலேயே ஆற்றில் விழுந்து காணாமல் போய் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து தோட்ட மக்கள், பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரின் மனைவி தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கண்டியில் மும் மத ஸ்தலங்களுக்கும் சென்று ஆசி பெற்ற ஜானாதிபதி (Photos)

கருணா அம்மான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்

இன்றைய நாடாளுமன்றில்…