உலகம்

இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க தயார் – ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை.

(UTV | கொழும்பு) –

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் உக்கிரமாக நடைபெற்று வரும் நிலையில், காசாவின் நடைபெற்றும் போருக்கு ஈரான் பதிலடி கொடுக்க தயாராகிறது என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இஸ்ரேலுக்கு எதிராக தடைகளை விதிக்க இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

சவூதி அரேபியாவில் இடம்பெற்றுவரும் அரபு நாட்டு தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் ஜனாதிபதி தொடர்ந்து தெரிவிக்கையில், காசாவில் இடம்பெற்றுவரும் போருக்கு நடடிக்கை எடுக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இஸ்ரேல் மீது இஸ்லாமிய நாடுகள் எண்ணெய் மற்றும் பொருட்கள் மீதான தடைகளை விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.தல்கள் தொடர்பில் வார்த்தைகளால் பதில் கூறாமல் நடவடிக்கைகளால் பதிலளிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் காசாவில் இடம்பெற்று வரும் போருக்கு நடடிக்கை எடுக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
அரபு நாட்டு தலைவர்களின் மாநாட்டில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான “போர் குற்றங்களுக்கு” இஸ்ரேல் பொறுப்பு என்றும் காசாவில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை – பொலிஸ் அதிகாரிக்கு பிணை

பிரேஸிலில் ஒரே நாளில் 4,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

இலங்கையை 4ம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் தள்ளியது அமெரிக்கா