உள்நாடு

அரவிந்த டி சில்வாவுக்கு வழங்கப்படவுள்ள உயரிய அங்கீகாரம்!

(UTV | கொழும்பு) –

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஹால் ஓஃப் ஃபேமில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார்.

மும்பையில் எதிர்வரும் நவம்பர் 14 செவ்வாய்க்கிழமை நடைபெறும் சம்பிரதாய நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவுக்கு ஹால் ஓஃப் ஃபேம் என்ற அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது. அன்றைய தினம் அரவிந்த டி சில்வா ஐசிசி ஹால் ஓஃப் ஃபேமில் உத்தியோகபூர்வமாக வரவேற்கப்படுவார்,
இலங்கை கிரிக்கெட் வீரர்களான முத்தையா முரளிதரன் (2017), குமார் சங்கக்கார (2021) மற்றும் மஹேல ஜெயவர்த்தன (2021) ஆகியோருக்கு ஏற்கனவே இந்த சிறப்புரிமை வழங்கப்பட்டது.

1996 உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணி வீரர் அரவிந்த டி சில்வா, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்காக 401 முறை விளையாடியுள்ளார். அவர் 93 டெஸ்ட் போட்டிகளில் 6361 ஓட்டங்களையும், 308 ஒருநாள் போட்டிகளில் 9284 ஓட்டங்களையும் தனது 19 வருட விளையாட்டு வாழ்க்கையில் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாம் “அமைச்சுப் பிச்சை” கேட்டு அலைந்தவர்கள் இல்லை – ரிஷாட்

பாராளுமன்றில் எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சட்டமா அதிபரின் கோரிக்கை