உள்நாடு

புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகம் செய்வதற்கான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

(UTV | கொழும்பு) –

தற்போதுள்ள விளையாட்டுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அதன் தலைவர் ஜகத் பெர்னாண்டோவினால் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதன் அடியொற்றிய, முறையான வரைவொன்றை தயாரித்து புதிய விளையாட்டு சட்டத்தை உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும். இலங்கையின் தற்போதைய நீதி கட்டமைப்பு மற்றும் விளையாட்டு நிர்வாகத்தின் தற்போதைய கட்டமைப்பை ஆராய்ந்த பின்னர்> ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட இந்த நிபுணர் குழு அறிக்கையில் தற்போதுள்ள சட்டத்தை முழுமையாக மாற்றுவதற்கு நடைமுறையிலிருக்கும் நீதிக் கட்டமைப்பு மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு ஆகியவற்றில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த
தேசிய விளையாட்டு மேம்பாட்டு அதிகாரசபையொன்றை நிறுவ வேண்டியதன் அவசியம் (National Sports Development Authority – NSDA) பிரதானமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய விளையாட்டு சங்கங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் விளையாட்டு மேம்பாட்டு கொள்கைகளை வகுத்தல் மற்றும் சங்கங்களை மேற்பார்வை செய்யும் அதிகாரமும் மேற்படி அதிகார சபைக்கு இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு மேம்பாட்டு அதிகாரசபையின் 8 அடிப்படை நோக்கங்களை அடைந்துகொள்ள மேற்படி குழுவின் யோசனைகளை செயற்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்குறித்த அதிகாரசபையில் 11 உறுப்பினர்கள் உள்ளடங்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதன்படிய விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவரின் உத்தியோகபூர்வ அதிகாரத்துக்கமைய உத்தேச அதிகாரசபைக்காக நியமிக்கப்படவுள்ளதோடு, குறிப்பிட்ட துறைகள் மற்றும் வர்த்தக வாணிப துறைகளில் பிரசித்தம் பெற்ற தொழிலதிபர்கள் மூவர், தேசிய குழுக்களில் இருந்த தலைவர்கள் அல்லது விளையாட்டுக்கு அல்லது நாட்டுக்கு சிறப்பான சேவையாற்றியவர்களில் இருவர், தேசிய ஒலிம்பிக் குழுவில் பதிவு செய்யப்படாத தேசிய விளையாட்டு குழுவொன்றில் முன்னாள் தலைவர், நிதி, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று அமைச்சுக்களின் செயலாளர்களால் பெயரிடப்பட்டுகின்ற மூவரடங்கிய குழுவாக அமைந்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உத்தேச தேசிய விளையாட்டு அதிகாரசபையின் காலம் 04 வருடங்களாகும். அதற்காக பெயரிடப்படும் அல்லது உத்தியோகபூர்வ அதிகாரத்தினால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பதவிகளுக்கானவர்களை நியமிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் வாயிலாக அரசியலமைப்புச் சபையின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையினால் மேற்படி உறுப்பினர்களில் தகுதியானவரை அதிகாரசபையின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் மேற்படி குழு பரிந்துரைத்துள்ளது. மேலும்> சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) மற்றும் ஏனைய சர்வதேச விளையாட்டு சம்மேளனங்களுக்கு அமைய தேசிய விளையாட்டு சங்கங்களின் செயற்பாடுகளில் குறைந்தபட்ச தலையீட்டை உறுதி செய்வதற்காக அரசியல் தலையீடுகளை மட்டுப்படுத்தும் அதேநேரம்> முறைபாடுகள் மற்றும் சர்ச்சைகளைத் தீர்க்கும் அதிகாரத்துடன் கூடியதாக 10 நடுவர்கள் அடங்கிய விளையாட்டுக் முறைபாடுகளை நிவர்த்திப்பதற்கான நீதிமன்றம் (SGRT) ஒன்றை நிறுவ வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இங்கு முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் குறைந்தபட்சம் மூவரடங்கிய நடுவர்கள் குழுவினாரல் தீர்க்கப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேற்படி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தற்போதைய விளையாட்டுச் சட்ட கட்டமைப்பிலும் நிர்வாகக் கட்டமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையிலிருக்கும் தேசிய அரச சபையின் 1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தை திருத்தம் செய்வதன் மூலமோ அல்லது மேற்படி சட்டத்தை இரத்துச் செய்வதற்கான புதிய சட்டத்தை தயாரிப்பதன் மூலம் இந்த மாற்றங்களைச் செய்யலாம் என்றும் சட்ட உதவிகள் மற்றும் ஆலோசனைகளுடன் புதிய சட்டமூலத்தை தயாரிக்க முடியும் என்றும் குழுவின் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(புதிய கிரிக்கெட் சட்டத்தை அறிமுகம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவின் ஆய்வறிக்கை மின் அஞ்சலில் அனுப்பட்டுள்ளது.)

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதமரின் புகைப்படங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி பெறப்பட வேண்டும்?

editor

“IMF பணம் கிடைக்கும் திகதியில் இன்னும் நிச்சயமில்லை”

இன்று முதல் ரயில் சேவைகள் வழமைக்கு