உள்நாடு

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கு புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி நியமனம்.

(UTV | கொழும்பு) –

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக சிரேஷ்ட விஞ்ஞானி டி.டி. புலத்சிங்கள நியமிக்கப்பட்டுள்ளார். வைத்தியர் விஜித் குணசேகரவுக்கு பதிலாக அவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்டுவந்த வைத்தியர் விஜித் குணசேகர நேற்று தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் சபையின் தீர்மானத்தின் அடிப்படையில் வைத்தியர் விஜித் குணசேகர, அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். ஜனக சந்திரகுப்த தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கோட்டாபயவினதும் ரணிலினதும் வழியிலயே இன்று ஜனாதிபதி அநுரவும் பயணிக்கிறார் – சஜித்

editor

பாடசாலை வாகன கட்டணங்கள் அதிகரிப்பு!

இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தவும் – சபாநாயகர்