உள்நாடு

பெரியநீலாவணைப் பகுதிகளில் அதிகரிக்கும் மணல் கடத்தல் சம்பவங்கள்!

(UTV | கொழும்பு) –

 

சட்டவிரோதமாக உரப்பை மூலம் மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டிகள் ஊடாக கடற்கரை மண் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. காலநிலை மாற்றம் மற்றும் இரவு வேளைகளில் இனந்தெரியாத சிலர் இலக்கத்தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் அதிகளவான மணல்களை உரப்பையின் உதவியுடன் சட்டவிரோதமாக அள்ளிச்செல்கின்ற செயற்பாடு அதிகரித்துள்ளது.

இச்செயற்பாடானது பெரியநீலாவணை, பாண்டிருப்பு, மருதமுனை ,கல்முனை ,சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் ,பகுதிகளில் பரவலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இரவு வேளை தற்போது ரோந்து சேவைகள் இடம்பெறாமையினால் இச்சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கடத்தல்காரர்கள் இச்சட்டவிரோத செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக கடந்த காலங்களில் பொலிஸார் இராணுவம் கடற்படையினர் இணைந்து கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமை திணைக்களம் உத்தியோகத்தர்களும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவரணை முதல் நிந்தவூர் வரையான கடற்கரையோரங்களில் சட்டவிரோதமாக மண்கடத்தல் இடம்பெற்று வருவதுடன் பாரிய மண்ணரிப்புகளும் இப்பகுதிகளில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பித்தக்கது.

   

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சபாநாயகரால் சிறைச்சாலைகள் ஆணையாளாருக்கு பணிப்புரை

வானை அதிர வைத்த வான்படை சாகசங்கள் [VIDEO]

பல பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தகர்க்க நடவடிக்கை