(UTV | கொழும்பு) –
காசா பகுதியின் தலைநகரான காஸா சிட்டியை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் இராணுவம், அந்த நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தமாக அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் வெளியேற உத்தரவிட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அந்த நகரிலிலிருந்து காஸாவின் தெற்குப் பகுதிக்கு வெளியேறினர். ஹமாஸ் அமைப்பினரின் கோட்டையாக திகழும் காசா சிட்டிக்குள் நுழைந்து வேட்டையாடுவதற்காக இஸ்ரேல் இராணுவம் பல கட்டங்களாக தாக்குதல் நடத்தி அந்த நகரை நோக்கி முன்னேறி வந்தது.
இந்நிலையில், காசா சிட்டியை தாங்கள் அனைத்து திசைகளிலும் சுற்றி வளைத்து விட்டதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று அறிவித்துள்ளது. நகரை சுற்றிலும் இஸ்ரேல் படையினரின் உள்ளதால் காசாவின் தெற்குப் பகுதியும், வடக்குப் பகுதியும் 2-ஆக பிரிக்கப்பட்டு விட்டது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான அண்மைக்காலப் போரில் இது மிக முக்கியக் கட்டம் என்று இராணுவம் தெரித்துள்ளது.
அதையடுத்து, கூடிய விரைவில் இராணுவம் அந்த நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், நகருக்குள் முழு வீச்சில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, அங்கு வசிக்கும் பொதுமக்கள் தெற்கு காசாவிற்கு வெளியேற இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්