உலகம்

காசா மீது மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பது நல்லதல்ல – ஜான் கிர்பை

(UTV | கொழும்பு) –

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் போராளிகள் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவியிக்கையில்,போர் முடிந்ததும் காசாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கான பொறுப்பை, காலவரையின்றி வைத்திருப்பது பற்றி இஸ்ரேல் அரசாங்கம் பரிசீலிக்க கூடும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்க வெள்ளை மாளிகை பாதுகாப்பு சபையின் ஊடகப் பேச்சாளார் ஜான் கிர்பை செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,

காசாவை இஸ்ரேல் படைகள் மீண்டும் ஆக்கிரமிப்பது என்பது நல்லதல்ல என ஜனாதிபதி நினைக்கிறார். அது இஸ்ரேலுக்கோ அல்லது இஸ்ரேல் மக்களுக்கோ நல்லதல்ல என தெரிவித்துள்ளார்.
நெதன்யாகு பேசும்போது, போர் முடிந்ததும், வருங்காலத்தில் தாக்குதல்கள் இடம்பெறாமல் தடுக்கும் வகையில் காசா முனை பகுதியில் பாதுகாப்பை கவனிக்க வேண்டிய தேவை இஸ்ரேலுக்கு உள்ளது என தெரிவித்தார். ஹமாஸ் போராளிகளின் வழிகளை தொடர்ந்து பின்பற்ற விரும்பாதவர்களால் காசா பகுதி ஆட்சி செய்யப்பட வேண்டும் என கூறினார்.

இது தொடர்பில் ஊடகப் பேச்சாளார் ஜான் கிர்பை தெரிவிக்கையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் நடத்திய பேச்சுவார்த்தைகள், மோதலுக்கு பின் காசா எப்படி தோற்றமளிக்கும்? காசாவில் ஆட்சிமுறை எப்படி இருக்கும்? என்பது பற்றி இருந்தது. ஏனெனில், அது எப்படியிருப்பினும், ஒக்டோபர் 6 ஆம் திகதிக்கு முன் இருந்தது போன்று இருக்க முடியாது. அது ஹமாஸ் அமைப்பினராக இருக்காது என கூறியுள்ளார். காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது என்பது ஒரு பெரிய தவறாகி விடும் என கடந்த மாதம் சி.பி.எஸ். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது, பைடன் குறிப்பிட்டார்.

எனினும், அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் ஹெர்ஜாக் அப்போது கூறும்போது, சண்டை முடிந்ததும் காசாவை ஆக்கிரமிக்கும் நோக்கம் இஸ்ரேலுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுவெல்லா இராஜினாமா

வழமைக்கு திரும்பும் நியூசிலாந்து

எகிப்து எல்லையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இராணுவம்!