உள்நாடு

கிழக்கில் அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

(UTV | கொழும்பு) –

கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் இன்று நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நியமனங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல, டீ.வீரசிங்க, ஏ. எல். எம். அதாவுல்லா, அலி சாஹிர் மௌலானா, பிரதம செயலாளர் R.M.K.S ரத்நாயக்க, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் w . திசாநாயக்க உட்பட பல அரச அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

       

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாடாளுமன்ற உறுப்பினராக பசில் பதவியேற்றார்

BreakingNews : ICC யிலிருந்து இலங்கை அணிக்கு அதிரடி தடை

கல்முனையில் நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!