உள்நாடு

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்!

(UTV | கொழும்பு) –

கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரிகளுக்கு எதிராக போராட்டங்கள் வலுபெற்றுள்ளதையடுத்து இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று காலை இந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய குழு, கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரிகளிடம் மனுவொன்றையும் கையளித்தது. இலங்கை அணி அண்மைக்காலமாக பங்குபற்றிய போட்டிகளில் படுதோல்விகளை சந்தித்து வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் இலங்கை அணி மீது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். அத்துடன், அணியின் முன்னாள் வீரர்களும் தேர்வாளர்கள் உட்பட கட்டுப்பாட்டுச் சபைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து , இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் மொஹான் டி சில்வா நேற்று தமது பதவியை இராஜினாமா செய்திருந்ததையடுத்து, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்க தலைமையில் இடைகால நிர்வாக குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவால் வெளியிடப்பட்டுள்ள பின்புலத்திலேயே கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேர்தலுக்கான மாதிரி வாக்குச் சீட்டை வெளியிட்ட ஆணைக்குழு

editor

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

தமிழ் அரசு கட்சியின் வாக்கெடுப்பு ஆரம்பம்!