உள்நாடு

தையிட்டியில் கேளிக்கையில் ஈடுபட்ட சிங்கள மக்களால் கொதித்தெழுந்த தமிழ் போராட்டக்காரர்கள்!

(UTV | கொழும்பு) –

திஸ்ஸ விகாரையில் நேற்று மற்றும் இன்று ‘கஜினமகா உற்சவம் நடைபெறவுள்ளது.

அந்தவகையில் இன்றைய பூஜை வழிபாடுகளானது காலை ஆரம்பமாகியுள்ளது. இதன்போது சிங்கள மக்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக, விகாரையை நோக்கி வரும்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், தையிட்டி எங்கள் சொத்து, சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்று” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு வந்த சிங்கள மக்கள் போராட்டக்காரர்களுக்கு வெறுப்பூட்டும் விதத்தில் செயற்பட்டனர். இதன்போது அதிகளவிலான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிகின்றது. குறித்த போராட்டத்தில் ஈடுபடுகின்ற போராட்டக்காரர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றம் நேற்றையதினம் கட்டளை ஒன்றினை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யாசகர்களுக்கு பணம் வழங்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொவிட் தொற்றாளர்களை வீட்டில் வைத்து கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

ஸ்டாலினுக்கு பிணை