உலகம்

காசா போரினால் உலகமே தனது நாட்டை மறந்துவிட்டது – உக்ரைன் ஜனாதிபதி.

(UTV | கொழும்பு) –

இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையிலான போர் உக்ரைன் மீதான உலக கவலையை நீக்கிவிட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இலக்குகளில் இதுவும் ஒன்று என்றார். உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வொண்டலீனை சந்தித்த போதே உக்ரைன் ஜனாதிபதி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைன் மீதான கவனத்தை ரஷ்யா பலவீனப்படுத்த விரும்புவதாகக் கூறிய உக்ரைன் ஜனாதிபதி, அனைத்தும் தங்கள் அதிகாரத்தின் கீழ் இருப்பதாக வலியுறுத்தினார். ரஷ்யா தனது வான்வெளியை கட்டுப்படுத்தி வருவதாகவும், அந்த நிலையை மாற்ற, உக்ரைனுக்கு விரைவில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எப்-சிக்ஸ்டீன் போர் விமானங்கள் தேவை என்றும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும், விமான எதிர்ப்பு ஆயுதங்கள் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அழுத்தம் கொடுக்கப்படுவதாக வெளியான தகவலை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸ்லெனெஸ்கி மறுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அமெரிக்கா மற்றும் தனது நட்பு நாடுகளின் தலைவர்களிடமிருந்து இதுவரை தனக்கு அத்தகைய அழுத்தம் இல்லை என்று அவர் கூறினார். அப்படி ஒரு சம்பவம் நடக்காது என்று கூறியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாகிஸ்தான் சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதி

அணு உலை நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பான்

படகு விபத்து – 38 பேர் பலி – 100 க்கும் மேற்பட்டோரை காணவில்லை

editor