உள்நாடு

அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் குறைவு – வெரிட்டே ரிசர்ச்சின் ஆய்வில் தகவல் .

(UTV | கொழும்பு) –

வெரிட்டே ரிசர்ச்சின் கேலப் பாணியிலான (Gallup style) சமீபத்திய ஆய்வுச் சுற்றின் ‘தேசத்தின் மனநிலை’ கருத்துக்கணிப்பின்படி, 2023 ஜூன் மாதத்தில் 21%ஆக இருந்த அரசாங்கம் மீதான மக்கள் அங்கீகாரத்தின் மதிப்பீடு 2023 ஒக்டோபரில் 9%ஆக குறைந்துள்ளது.
2023 ஜூன் மாதத்தில் 12%ஆக இருந்த நாட்டின் நிலை குறித்த திருப்தி சரி பாதியாக அதாவது 6%ஆக குறைந்துள்ளது என்று கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது. பொருளாதாரம் மீதான நம்பிக்கை மதிப்பெண் ஜூன் மாதத்தில் எதிர்மறை (-) 44 இருந்து எதிர்மறை (-) 62ஆக குறைந்துள்ளது.

‘தேசத்தின் மனநிலை’ கருத்துக்கணிப்பு வருடத்துக்கு மூன்று முறை நடத்தப்படுகிறது, மேலும் நாடளாவிய ரீதியில், தேசிய அளவிலான பிரதிநிதித்துவ பதில்களின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டே இக்கருத்துக்கணிப்பு இடம்பெறுகிறது. இக்கணக்கெடுப்பு மாதிரி மற்றும் முறையானது 95% நம்பிக்கை மட்டத்தில் அதிகபட்ச பிழை வரம்பு 3%க்கும் குறைவாக கட்டுப்படுத்தும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் மீதான அங்கீகாரம்:

“தற்போதைய அரசாங்கம் செயல்படும் முறையை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு, 9% பேர் தாங்கள் அதை அங்கீகரிப்பதாகக் கூறியுள்ளனர் (± 1.93% பிழை விளிம்புடன்). மேலும், 7% பேர் தங்களுக்கு அதைப் பற்றிய எந்தவித கருத்தும் இல்லை என்று கூறியுள்ளனர். அரசாங்கம் மீதான அங்கீகாரம் தொடர்பான தற்போதைய மதிப்பீடு 2022 ஜனவரி, ஒக்டோபர் மற்றும் 2023 பெப்ரவரியில் இருந்த 10% 10% அருகிலுள்ள மதிப்பை பிரதிபலிக்கிறது.

இலங்கை குறித்த திருப்தி:

“பொதுவாக, இலங்கையில் நடக்கும் விடயங்கள் குறித்து நீங்கள் திருப்தியடைகிறீர்களா அல்லது அதிருப்தியடைகிறீர்களா?” என்ற கேள்விக்கு, 6% பேர் மட்டுமே திருப்தியடைவதாக தெரிவித்துள்ளனர் (± 1.66% பிழை விளிம்புடன்). இந்த மதிப்பீடு 2023 பெப்ரவரியில் காணப்பட்டதை போலவே 4%ஆக குறைவாகவே இருந்தது.

பொருளாதாரம் தொடர்பான நம்பிக்கை:

ஜூன் மாதத்தில் எதிர்மறை (-) 44ஆக இருந்த பொருளாதார நம்பிக்கை மதிப்பெண் ஒக்டோபரில் எதிர்மறை (-) 62ஆக மோசமடைந்து காணப்படுகிறது. இருப்பினும், பொருளாதார நம்பிக்கை மதிப்பெண் எதிர்மறை (-) 96 மற்றும் எதிர்மறை (-) 78க்கு இடையில் ஏற்ற இறக்கமாக காணப்பட்டாலும் கூட, 2022இல் காணப்பட்ட அளவை விட சிறப்பாகவே இருக்கிறது.
பொருளாதார நம்பகத்தன்மையை கணக்கிடுவதற்கு தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் அதன் வழிமுறைகளை மதிப்பிடும் பல தேர்வு வினாக்கள் பயன்படுத்தப்பட்டன. மதிப்பெண்கள் எதிர்மறை (-) 100 முதல் நேர்மறை (+) 100 வரை இருக்கலாம்.

பூஜ்ஜியத்துக்கு மேல் உள்ள மதிப்பு, பெரும்பான்மையானவர்கள் பொருளாதாரத்தை எதிர்மறையாக பார்க்காமல் நேர்மறையாக பார்க்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது. அனைவரும் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாகவும் (நல்ல அல்லது சிறந்த நிலைக்குப் பதிலாக) அது மோசமாகி வருவதாகவும் (சிறந்த நிலைக்குப் பதிலாக) கருதினால், அதற்குரிய மதிப்பெண் (-) 100ஆக இருக்கும்.

கருத்துக்கணிப்பை நடைமுறைப்படுத்தல்:

அரசாங்கம், நாடு மற்றும் பொருளாதாரம் தொடர்பாக மக்களின் அங்கீகாரம், திருப்தி மற்றும் நம்பிக்கையை மதிப்பிடுவதற்காக “தேசத்தின் மனநிலை” கருத்துக்கணிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தேசிய அளவில் வயது வந்த இலங்கையர்கள் 1,029 பேர் கொண்ட பதில் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு 2023 ஒக்டோபர் 21 முதல் 29 வரை இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வெரிட்டே ரிசர்ச் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கெடுப்புக் கருவியின் ஒரு பகுதியாக இக்கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது. இதன் மூலம் இலங்கையர்களின் கருத்துகளை ஆய்வு செய்ய மற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 460 தொற்றாளர்கள் ஒருவர் பலி

நாடு முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்!

மேலும் 594 இலங்கையர்கள் நாடு திரும்பினர்