விளையாட்டு

அர்ஜுன தலைமையில் இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்காலக் குழு – ரொஷான் ரணசிங்க

(UTV | கொழும்பு) –

அர்ஜுன ரணதுங்க தலைமையில் இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்காலக் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார். 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் மூலம் இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்காலக் குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அந்தவகையில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்துடன் இன்றிலிருந்து புதிய இடைக்காலக் குழு தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளது. அர்ஜுன ரணதுங்க தலைமையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா, உபாலி தர்மதாச, சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஹார்டி ஜமால்தீன் ஆகியோர் இந்த குழுவில் ஏனைய உறுப்பினர்களாக உள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி

ஆசிய பளு தூக்கும்போட்டியில் பதக்கங்களை வென்ற போட்டியாளர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று