உலகம்

பணயக் கைதிகளின் விபரங்களை பகிருமாறு இஸ்ரேல் எச்சரிக்கை!

(UTV | கொழும்பு) –

அமைதியான வாழ்க்கை மற்றும் உங்களுடைய குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் என்பது உங்களுடைய விருப்பம் என்றால், உடனடியாக மனிதநேய நலன்களுக்கான விசயங்களை செய்யுங்கள். உங்கள் பகுதிகளில் சிறை பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகளை பற்றிய ஆராயப்பட்ட மற்றும் மதிப்புமிக்க தகவலை பகிருங்கள் என இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டு உள்ள எச்சரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளது.

உங்களுக்கும், உங்களுடைய வீடுகளுக்கும் அதிக பாதுகாப்பை வழங்குவதற்கான முயற்சியை நாங்கள் மேற்கொள்வோம் என்று இஸ்ரேல் இராணுவம் உறுதி கூறுகிறது. நிதி சார்ந்த பரிசையும் நீங்கள் பெறுவீர்கள். முழுமையான நம்பக தன்மைக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது. அப்படி யாரேனும் தகவல் வைத்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் தொடர்பு கொள்வதற்கான விவரங்களையும் இராணுவம் பகிர்ந்துள்ளது.

இதற்கு முன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசும்போது, களத்தில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக, எங்களுக்கு ஒரேயொரு பணி உள்ளது. அது அவர்களை அழிப்பது. அந்த பணியை முடிக்கும் வரை நாங்கள் நிறுத்தமாட்டோம் என்று குறிப்பிட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிரியா மற்றும்பொலிவியாவில் பதிவானது முதல் மரணம்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!

பஹ்ரைன் செல்லும் அனைவருக்கும் PCR பரிசோதனை