(UTV | கொழும்பு) –
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் பிணை வழங்கியுள்ளது.
குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை நடைபெறும் போது முன்னாள் பிரதமர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என நம்பிக்கை வெளியிட்ட நீதிமன்றம் பிணை வழங்க தீர்மானித்துள்ளது. 73 வயதான நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். 2017 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர் பதவியை இழந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானை விட்டு வெளியேறிய நவாஸ் ஷெரீப் 4 ஆண்டுகள் கழித்து, கடந்த வார இறுதியில் நாடு திரும்பினார். இந்நிலையில், பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්