உள்நாடு

நாட்டைக் கட்டியெழுப்புவதாகக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றும் அசரங்கம் – சஜித்

(UTV | கொழும்பு) –

ஸ்மார்ட் நாட்டை உருவாக்கி வருவதாக கூறி,நாட்டின் சட்டத்தையும்,அமைச்சரவை தீர்மானங்களையும் மீறி மின்கட்டணத்தை அதிகரிக்கும் செயல்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும்,இதனால் ஸ்மார்ட் நாடொன்று உருவாகாது என்றும், இதன் காரணமாக பாடசாலை செல்லும் பிள்ளைகளின் போசாக்கு பற்றாக்குறையினால் அவர்களுக்கு சிறந்த கல்வி மற்றும் உணவை வழங்குவதில் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர் எனவும், இது பிள்ளைகளின் மூளை வளர்ச்சியை பலவீனப்படுத்துவதாகவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.

ஓராண்டில் முறைகேடாக 3 தடவை மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கட்டணங்களை அதிகரித்து விட்டு,குறித்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பெரும் வீராப்பு பேசி வருகிறார் என்றும், எவ்வளவு தான் நீர் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டாலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டண திருத்தத்தை மேற்கொள்வதாக கூறுவதை அனுமதிக்க முடியாது என்றும்,இது ஸ்மார்ட் நாட்டுக்கான பண்பல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கூறும் ஸ்மார்ட் நாட்டில் விலை அதிகரிப்பும் விற்பனையுமே காணப்படுவதாகவும்,பில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டும் லிட்ரோ கேஸ் நிறுவனத்தைக் கூட விற்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகவும், இதனால் ஊழியர்களின் பாதுகாப்பு கூட பறிபோயுள்ளதாகவும்,நாட்டில் நடப்பது விலை அதிகரிப்பும் விற்பனையும்தான் என்றும்,இது வரம்பற்ற அசௌகரியத்தையும் அழுத்தத்தையும் தோற்றுவித்துள்ளதாகவும், இதனால் நாட்டின் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்கே மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

75 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தற்போதைய எதிர்க்கட்சி மக்களுக்கு சேவை செய்து வருவதாகவும்,தானும் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஒரு பொது ஊழியர் என்றும்,நாட்டின் தற்காலிக பதவி நிலை பொறுப்பை மட்டுமே தானும் தற்சமயம் ஆற்றிவருவதாகவும், மக்களுக்கு சேவை செய்வதில் தான் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். டிஜிட்டல் இலங்கையை உருவாக்கும் பயணத்தை வலுப்படுத்தும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் 37 ஆவது ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் நேற்று  வட கொழும்பு டி லா சால் கல்லூரிக்கு வழங்கி வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் தலைவர்களுக்கு மக்கள் மீதான உணர்திறன் இல்லை என்றும்,நாட்டு மக்கள் அழுத்தத்திற்கு உள்ளாகும் போது, நாட்டின் ஜனாதிபதி மேலும் மேலும் விலைகளை அதிகரித்தும் சொத்துக்களை விற்பனை செய்தும் நாட்டு மக்களை கொன்று குவித்து வருகிறார் என்றும், பொருளாதாரச் சுருக்கத்திற்கு அப்பால் சனத்தொகையைக் குறைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நாட்டில் புத்திஜீவிகள் வெளியேற்றம் ஏற்பட்டுள்ள இவ்வேளையில்,நாட்டிற்குத் தேவை துன்பங்களைத் தீர்க்கும் தலைமைத்துவமே என்றும்,இதற்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் கல்வியே முதலிடம் வகிப்பதாகவும், அனைத்து 10126 அரச பாடசாலைகளும் ஸ்மார்ட் பாடசாலைகளாக மாற்றப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வறுமையை ஒழிக்க கல்வியே சிறந்த வழி என்றும்,இது பொருளாதார மற்றும் சமூக வலுவூட்டலுக்கான சிறந்த செயல்முறையாகும் என்றும்,ஒரு நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கவும்,ஏற்றுமதியை மேம்படுத்தவும் இது சிறந்த செயல்முறை என்றும்,நாட்டைப் பாதுகாக்கும் வகையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களைச் செய்வது போலவே நாட்டின் உள்ளக ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் கல்வி மூலம்,வர்த்தகம் மற்றும் வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்தி உலக அமைதியை உருவாக்க கல்வியை பயன்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

போட்டி உலகில் எல்லா இடங்களிலும் இலங்கை வெற்றிபெறச் செய்ய ஒரே வழி ஸ்மார்ட் கல்விதான் என்றும்,இந்த ஸ்மார்ட் கல்வியின் மூலம்,ஸ்மார்ட் மாணவன்,ஸ்மார்ட் இளைஞன்,ஸ்மார்ட் குடிமகன் உருவாகுவதாகவும்,இதன் மூலம் ஸ்மார்ட் நாடு உருவாகுவதாகவும்,இதற்கு குறுகிய மனப்பான்மைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றும், அனைத்து சர்வதேச நாடுகளுடனும் ஒன்றிணைந்து கருத்துக்களை பரிமாறி புதியதன அறிவை பெற வேண்டும் என்றும்,இதற்கு ஸ்மார்ட் ரீதியான வகுப்பறை முறை அத்தியவசியமானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதற்காக 1 ஆம் தரத்திலிருந்தே தகவல் தொழில்நுட்பத்தை கல்வியில் சேர்க்க வேண்டும் என்றும்,இதற்கு ஆங்கில மொழியையும் பயன்படுத்த வேண்டும் என்றும், நமது நாட்டின் கல்வி முறையில் இத்தகைய மாற்றம் வர வேண்டும் என்றும்,கல்வித் துறையில்,உலக அளவில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் இருப்பது போல்,நமது நாட்டிலும் பாடத் திட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச தொழிலாளர் சந்தையின் தேவையின் அடிப்படையில் இது உருவாக்கப்பட வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். கடந்த கால வினா பத்திரங்களை மனப்பாடம் செய்து பரீட்சை எழுதும் முறையை மாற்ற வேண்டும் என்றும்,கேள்விகளுக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் கல்வி முறை வகுக்கப்பட வேண்டும் என்றும், உலகையே வெல்லும் புதிய தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றும் கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும் என்றும், தேக்கமடைந்துள்ள கல்வி முறை மாற்றப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் அமுல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 171,966,900.00 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரபஞ்சம் பஸ் திட்டத்தின் கீழ் 80 அரச பாடசாலைகளுக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பாடசாலை பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு 389,200,000.00 ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது. பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தின் கீழ் 37 அரச பாடசாலைகளுக்கு 33,223,650.00 ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றைய நாணயமாற்று விகிதம்

மலேசியா செல்ல ஏமாற்றுபவர்களிடம் ஏமாற வேண்டாம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் [VIDEO]