வகைப்படுத்தப்படாத

பலஸ்தீன் – இஸ்ரேல் யுத்தம் தொடர்பில் கத்தார் எமிரின் அறிக்கை!

(UTV | கொழும்பு) –

நாங்கள் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க மாட்டோம். மற்றும் குழந்தைகளின் உயிருக்கு மதிப்பில்லை என்பது போல் செயற்படுவதை சகித்துக்கொள்ள மாட்டோம்! ஆக்கிரமிப்பு, முற்றுகை மற்றும் பலாத்கார குடியேற்றத்தின் உண்மைகளை தொடர்ந்து புறக்கணிப்பது அனுமதிக்கப்படாது. நாங்கள் சமாதானத்தை ஆதரிப்பவர்கள். சர்வதேச சட்டபூர்வமான நியமங்கள் மற்றும் அரபு முன்முயற்சியை நாங்கள் கடைபிடிக்கிறோம். நாங்கள் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க மாட்டோம்.

என்ன நடக்கிறது என்பது மிகவும் ஆபத்தானது. அனைத்து மத மற்றும் உலக நியமங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் சட்டங்களை மிதிப்பது உட்பட – பலஸ்தீனில் நடக்கும் அநியாயங்களை நாங்கள் தொடர்ந்தும் சகித்துக்கொண்டிருக்க மாட்டோம்! போதும் இதுவரை நடந்த எல்லாமே போதும் என்கிறோம், மேலும், தற்காப்பிற்கான உரிமை என்பது இஸ்ரேலுக்கு நிபந்தனையற்று கொலை செய்ய வழங்கப்படும் தங்குதடையற்ற அனுமதி அல்ல. ஆக்கிரமிப்பு, முற்றுகை மற்றும் பலாத்கார குடியேற்றத்தின் யதார்த்தத்தை தொடர்ந்தும் புறக்கணிப்பது அனுமதிக்க முடியாதது! நம் காலத்தில், தண்ணீரைத் துண்டித்து, மருந்து மற்றும் உணவைத் தடுப்பது – முழு மக்களுக்கும் எதிரான ஆயுதமாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படக்கூடாது.

பிராந்தியம் மற்றும் உலகத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தும் – இந்த ஆபத்தான விரிவாக்கத்திற்கு எதிராக – தீவிரமான பிராந்திய மற்றும் சர்வதேச நிலைப்பாட்டிற்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
எல்லா எல்லைகளையும் தாண்டிய இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரவும் – இரத்தம் சிந்துவதைத் தவிர்க்கவும் – இராணுவ மோதலின் விளைவுகளிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். – யுத்தம் எந்த விதமான தீர்வையும் தராது. மேலும். யுத்தத்தினால் நடக்கப்போவது – துன்பத்தை அதிகப்படுத்துவதும் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கூட்டுவதும் – அநீதிகளை அதிகரிப்பது மட்டுமே.

நாம் சமாதானத்தை விரும்புகிறோம்! யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறோம்! இந்த கொடூர யுத்தத்தை நிறுத்த கைகோர்க்க அனைவரையும் அழைக்கிறோம்!

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பு நகரில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள குப்பை பிரச்சனை

ஜனாதிபதி தலைமையில் கிராம அலுவலர்களுக்கு டெப் கணனி

அத்தியாவசிய ஓளடதங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு