(UTV | கொழும்பு) –
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 27 வருட பூர்த்தியை முன்னிட்டு பல்கலைகழக வளாகத்தில் இன்று மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.தென்கிழக்கு பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மரநடுகை நிகழ்வின்போது பீடாதிபதிகள், பதில் பதிவாளர், நூலகர், பேராசிரியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், பொறியியலாளர், திணைக்களங்களின் தலைவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர் சங்கங்களின் தலைவர்கள், கல்விசார உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.நிகழ்வுக்கு கொமர்சியல் வங்கியும் அம்பாரை வனவள தினைக்களமும் பிரதான அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්